Sunday 18 January 2015

ஐ” படம் பார்க்க போய் என்னுடைய ஐ (eye) முழி பிதுங்கிய அனுபவம்




ஷங்கர் படம் என்பதால் ஆர்வத்துடன்தான் படம் பார்க்க சென்றேன். விக்ரமின் அட்டகாசமான நடிப்பு, எமி.ஜாக்ஸனின் அழகு, பி.சி ஸ்ரீராமனின் துல்லியமான ஓளிப்பதிவு, ஏ.ஆர் ரஹமானின் துள்ளல் இசை, ஷங்கரின் அற்புதமான இயக்கம், மிக சிறப்பான சண்டைக்காட்சிகள்  இவைகள் எல்லாம் இருந்தும் திரும்பி வரும்பொழுது மகிழ்ச்சியுடன் வர முடியவில்லை. ஏதோ ஒன்று குறை இருப்பது  நன்றாகவே தெரிகிறது.

படத்தின் கதை இப்பொழுது எல்லா பதிவர்களுக்கும் தெரிந்து இருக்கும் ஐந்து வில்லன்கள் விக்ரமிற்கு வைரஸ் ஊசியை உடம்பில் செலுத்தி அவரின் அழகை கெடுத்து கோரமாக்கி விடுகிறார்கள். பதிலுக்கு அவர் அவர்கள் ஐந்து பேரையும் எப்படி பழி வாங்குகிறார் என்பதை திரையில் பார்த்து தெரிந்து கொள்ளவும்.

படத்தில் எனக்கு பிடித்த ஆறு அம்சங்கள் :

·    விக்ரம் – என்ன ஒரு நடிப்பு.? மனிதர் நன்றாகவே உழைத்திருக்கிறார். எத்தனையோ  கதாநாயகர்கள் மீசையை கூட எடுக்க தயங்குவார்கள். இவரோ  ஐம்பது கிலோ எடையை குறைத்துகொண்டு முகத்தை கோரமாக்கிகொண்டு அசத்துகிறார். சண்டைக்காட்சிகளில் அப்படி ஒரு அடி வாங்குகிறார். இவரை மாதிரி யாரும்  இத்தனை அடிகள் யாரும் வாங்கியதாக ஞாபகம் இல்லை.

·     எமி ஜாக்ஸன் -  அப்படி ஒரு அழகு. நடிப்பும் வருகிறது. மாடலிங் துறையில் முன் அனுபவம் இருந்ததால் இந்த வேடத்திற்கு இவர் மிகவும் பொருத்தம்.

·      ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம்.- பாடல் காட்சிகள் ஒவ்வொன்றையும் அத்தனை அழகாக படம் பிடித்து இருக்கிறார். எழுந்து போவதற்கு மனம் வரவில்லை. சீனாவில் இத்தனை கண்ணுக்கு குளிர்ச்சியான இடங்களா ?

·         ஏ.ஆர்.ரஹமான்- நீண்டநாளைக்கு பிறகு இந்தப்படத்தில்தான் இவர் பாடல்கள்  நன்றாக அமைந்துள்ளது. இனிமையாக கேட்கவும் முடிகிறது.

·         ஷங்கர் – ஹாலிவுட் ஸ்டைலில் விறுவிறுப்பாக படத்தை இயக்கி இருக்கிறார்.

· சண்டைகாட்சிகள் : இந்தப்படத்தில் இருவர் சண்டைக்காட்சிகளை அமைத்து இருக்கின்றார்கள். சீனாவில் நடக்கும் சைக்கிள் துரத்தல் அன்னியனை நினைவு படுத்தினாலும் அருமை. ஜிம் பாரில் நடக்கும் சண்டையும் அருமை. வில்லன்கள் விக்ரமை அடிக்கும் ஒவ்வொரு அடியும் நமக்கு வலிக்கிற மாதிரி அடிக்கிறார்கள். தடதடவென்று விக்ரமின் முகத்திலும் வயிற்றிலும் அடிக்கிறார்கள்.

படத்தில் எனக்கு உறுத்திய காட்சிகள்

·      ங்கர்   படத்தை குடும்பத்துடன் சென்று பார்பதுதான் வழக்கம். இந்தப்படத்தில் சில காட்சிகளை குடும்பத்துடன் பார்க்க முடியாதபடி செய்து விட்டார்கள். நம்மை நெளிய வைத்து இருக்கிறார்கள்
·         
    நீளமான சண்டைக்காட்சிகள்.

·          கதையை கொஞ்சம் ஆல்டர் செய்து இருக்கலாம்.
·          சந்தானத்தின் பேட்டி.

ஆக மொத்தம் சில குறைகள் இருந்தாலும் இது ஒரு வித்தியாசமான படம். சில மொக்கைபடங்களுக்கு இந்த படம் எத்தனயோ மேல்.


(இந்தப்படத்தை பார்த்த அனுபவத்தைவிட தியேட்டரில் நடந்த அனுபவம் மிகவும் சுவராசியமனது. ஒரு குடிமகன் என் அருகில் வந்து எஸ்கியுஸ்மி ஏனிபடி சிட்டிங் தேர் ? என் அருகில் உள்ள ஒரு காலி இருக்கையை பார்த்து கேட்டார். நான் இல்லை என்றதும் அமர்ந்தார். அதற்கு அப்புறம் அவர் செய்த சேட்டைகள் மிகவும் சிரிப்பை வரவழைத்தது. ஊ என்று ஊளை இடுவதும். எழுந்து கை தட்டுவதுமாய் இருந்தார். ஒருகாட்சியில் எழுந்து மெயின் வில்லனைபார்த்து அவர் உணர்சிவசப்பட்டு “மவனே இருக்குடி உனக்கு ஆப்பு? என்று கூச்சலிட்டார். பிறகு அடி குத்து, கொல்லு என்றும் கத்தி கொண்டு இருந்தார். அப்புறம் ஹாலைவிட்டுவெளியில் செல்லுவதும் உள்ளே வருவதுமாய் இருந்தார். உள்ளே வந்தபிறகு என்னிடம் சார் அந்த ஆளை வில்லன் கொன்னுட்டாரா என்று என்னிடம் கேள்வி கேட்டு தொந்தரவு கொடுத்து கொண்டு இருந்தார். அவரிடம் நான் மாட்டிகொண்டு என்னுடய ஐ அதுதாங்க கண்ணு (eye) முழி பிதுங்கி போச்சு. ஆனாலும் நம்ம ஊருல்ல சினிமா படத்தை சினிமாபடமாக பார்க்கறதில்லை. சில பேர் படத்தைப்பார்த்து உணர்ச்சிவசப்பட்டு அப்படி ஒன்றிடராங்க. இனிமே படத்தை முதல் நாள் பார்க்க கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன். இவரை பார்த்தவுடன் எனக்கு வடிவேலு காமெடிதான் ஞாபகத்திற்கு வந்தது.)