Saturday 2 February 2013

தில்லி மெட்ரோ பயணம் – சில சுவாரசியமான காட்சிகள்




தில்லி மெட்ரோ  தில்லி  மக்களின்   அன்றாட  வாழ்க்கையில் ஒரு அங்கமாகி விட்டது. 

தினமும் பல தரப்பட்ட மக்கள் வந்து போய்கொண்டு இருக்கின்றனர். தில்லி மெட்ரோவைப் பற்றி சில தகவல்களையும், நான் தினமும் அலுவலகத்திற்குபோகும்பொழுது நான் சந்தித்த பார்த்த சில சுவாரசியமான  காட்சிகளையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

தில்லி மெட்ரோ தினமும் காலை ஆறு மணி முதல் இரவு பதினொன்று மணி வரை 2700 முறை தில்லியை சுற்றிவந்து கொண்டு இருக்கிறது.1.8 மில்லியன் மக்கள் தினமும் இதில் பயணம் செய்கிறார்கள். மொத்தம் 42 ஸ்டேஷன்கள்,  ஆறு லைன்களில் மெட்ரோ செயல்படுகிறது.

மெட்ரோவினால் நன்மைகள்.

பயணம் செய்யும் நேரம் குறைகிறது. மெட்ரோ முழுவதும் குளிருட்டபட்டு இருப்பதால் வெய்யில் காலம், குளிர் காலம் இவற்றிற்கு தகுந்தாற் போல் மெட்ரோ செயல்படுகிறது.

மெட்ரோவின் குறைகள்

மெட்ரோவில் சில சமயம்  கூட்டம் அலை மோதும்அப்பொழுது செக்யூரிட்டி கார்டு அவர்களை  மெட்ரோ கோச்சுக்குள் தள்ளி கதவை மூடூவார்கள்.    தில்லி பலாத்கார சம்பவதின் பொழுது பத்து மெட்ரோ ஸ்டேஷ்னை  மூடிவிட்டார்கள். மக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளானார்கள்

இனி மெட்ரோவில் பயணிக்கும் நபர்களைப் பார்ப்போம்.

காதலர்கள்  

இவர்கள் செய்யும் அட்டகாசம் தாங்கமுடியாது.       மேலே தொங்கும்  கைப்பிடியை  பிடித்துக்கொண்டு ஒருவர்மேல சாய்ந்து நின்று கொண்டு வருவார்கள் ஒவ்வொரு  ஸ்டேஷனிலும் டிரைவர் பிரேக் போட்டு நிறுத்தும் பொழுது கன்னத்தோடு கன்னமாக 
உரசிக் கொள்வார்கள்.மாலைபொழுதில்ஒவ்வொரு ஸ்டேஷனிலும் ஜோடிகளை பார்க்கலாம்.

வேலைக்கு போகும் இல்லத்தரசி  :     

இவர்கள் தனதுமாமியாருக்கு போனில் உத்தரவு பிறப்பித்துக் கொண்டே வருவார்கள். ஆறு மாத குழந்தையை  மாமியாரிடம்   விட்டு  விட்டு  வந்து இருப்பார்கள்.  நிம்மதியாக இருக்க மாட்டார்கள் குழந்தையைப்பறி நினைத்து கொண்டு இருப்பார்கள்.

கல்லூரி    மாணவர்கள்.

இவர்கள் எப்போழுதும் காதில் ஹெட் போன்  மாட்டி கொண்டு  படித்து கொண்டே வருவார்கள். சிலர் பாடத்தினை சகமாணவர்களோடுவிவாதித்து கொண்டு  வருவார்கள். 

இவர்களைத் தவிர பல தரப்பினர் வெளி நாட்டின்ர், வயோதிகர்கள், வேலைக்கு செல்லும் ஆண்கள், டில்லிக்கு புதியதாக வந்தவர்கள் வந்தும் போய்க்கொண்டும் இருக்கிறார்கள்.  அவர்களைப் பற்றி பிறகு வரும் பதிவுகளில் எழுதுவேன். இன்னும் மெட்ரோவைப்பற்றி எழுதுவதற்கு நிறைய இருக்கிறது.

==========================================================================
இது என்னுடைய முதல் பதிவு. மெட்ரோ பயணத்தில்  இருந்து என்னுடைய பதிவு பயணத்தை ஆரம்பிக்கிறேன்.
===============================================================================





6 comments:

  1. உங்கள் பார்வையில் நிறைகுறைகள்... மெட்ரோ பயணம் இனிதே தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. வலையுலகுக்குப் புதிதாக வந்திருக்கும் உங்களை வருக வருக என வரவேற்கிறேன்!

    ReplyDelete
  3. பதிவுலகிற்கு உங்களை வரவேற்கிறேன் ரவி... இன்னும் விரிவாக எழுதியிருக்கலாம்... கட்டுரை ஆரம்பித்ததும் முடிந்தது போல இருக்கிறது... உங்களுடைய தனிப்பட்ட அனுபவத்தையும் சேர்த்து எழுதினால் சுவாரஸ்யமாக இருக்கும்...

    Follower widget வைக்கவும்...

    ReplyDelete
  4. தங்களது முதல் பதிவிற்கு வாழ்த்துகள்....

    தொடரட்டும் வலைப்பயணம். தில்லியிலா வாசம்?

    ReplyDelete
  5. தொடர்ந்து எழுதி கலக்க ஒரே மாவட்டத்தை சேர்ந்தவனாக வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  6. முதல் பதிவுக்கு வாழ்த்துகள் ரவி!
    தொடர்ந்து எழுதுங்கள். எதைப்பற்றி எழுதினாலும், உங்கள் அனுபவத்தையும் சொல்லுங்கள். அது பதிவுக்கு மேலும் மெருகூட்டும்.

    பாராட்டுக்கள்.

    ReplyDelete