Tuesday, 13 August 2013

சென்னை எக்ஸ்பிரஸ் - திரை விமர்சனம்

ராமசாமி அண்ணாச்சி தன் தம்பி வேலுசாமியிடம் தான் பார்த்த படமான சென்னை எக்ஸ்பிரஸ் படத்தைப்பற்றி விமர்சனம் செய்கிறார்.
வாங்கண்ணே ! சென்னை எக்ஸ்பிரஸ் படம் பார்த்துவிட்டு வரீங்களான்ணே ? படம் எப்படி இருக்கு ?
ஆமாம் தம்பி . இப்பத்தான் படம் பார்த்துவிட்டு வரேன். அது ஹிந்திபடமா தமிழ்படமான்னு எனக்கே ஒரு குழப்பமாயிடுச்சு போ. தமிழ் வசனம், தமிழ் நடிகர்கள், இராமேஸ்வரம்ன்னு ஒரே நம்ம ஆளுங்கதான். தமிழ் படம் பார்த்த திருப்தி கிடைச்சுடுச்சு.
கதை என்ன அண்ணே ?
சுருக்கமா சொல்றேன்ன கேட்டுக்க ?  
தாத்தாவோட அஸ்த்தியை ராமேஸ்வரம் கடலில் கரைக்கனுன்னு  சென்னை எக்ஸ்பிரசில் ஏறுகிறார்  நம்ம ஹீரோ ஷாருக்கான். அங்க அப்பா பார்த்த மாப்பிள்ளை பிடிக்கவில்லைன்னு ஊரைவிட்டு ஒடி வந்த நம்ம ஹீரோயின் தீபிகா படுகோனேவை சந்திக்கிறாரு. அவர் கூட நாலு அடியாட்களு இருக்காங்க. பாட்டு மூலமா உண்மையை ஷாருக்கானிடம் சொல்லி தன்னைக் காபாற்ற சொல்லுகிறாறு தீபிகா. ஷாருக்கானும் ஏதேதோ ட்ரை பண்றாறு எல்லாமே காமெடியாக ஆயிடுது. ரயிலு தீபிகாவின் சொந்த ஊருக்கு வந்துடுது. வேறு வழியில்லாமல், ஷாருக்கானைக் காட்டி இது தான் என் லவ்வருன்னு அப்பா சத்யராஜ்ஜிடம் பொய்சொல்லிடுறாறு தீபிகா. ஊருக்குள்ள  ஒரு வில்லன்  அவர்தான் தீபிகாவுக்கு சத்யராஜ் பார்த்திருக்கும் மாப்பிள்ளை. சண்டைக்கு கூப்பிடுகிறார். என்னை ஜெயிச்சிட்டு தீபிகாவை கல்யாணம் பண்ணிக்கோ என்று சவால் விடுகிறார். வில்லனின் உருவத்தைப்பார்த்து மிரண்டுபோய் ஷாருக்கான். அங்கிருந்து தப்பிசெல்ல முயன்று மீண்டும் அதே ஊரில் வந்து அவர்களிடமே சிக்கிக்கிராறு.  

அப்புறம் தீபிகா கழுத்தில் அறுவாளை வைச்சு அவரை ஒரு ஜீப்பில் ஏற்றிக்கொண்டு அங்கிருந்து தப்பித்து தாத்தாவின் அஸ்தியை ராமேஸ்வரத்தில் கரைத்து அதற்கு அப்புறம் தீபிகாவே காதலிச்சு, திரும்பவும் ஊருக்கு வந்து சத்யராஜ்ஜிடன் நியாத்தை சொல்லி வில்லனை புரட்டி எடுத்து தீபிகாவோட ஒண்ணு சேராரு. இதுதான் கதை. போதுமா வாயே வலிக்குது.

ஷாருக்கான்  நடிப்பு எப்படி அண்ணே ?

ஷாருக்கிற்கு காமெடி நல்ல வருது. வழக்கம்போல அவர் மார்கெட்டிங் வேலையை படத்தில காட்டுராரு. படத்தில நோக்கியாவிற்கு விளம்பரம் செய்கிறார். ரஜினி புகழ் பாடுகிறார், அவருடய ஸ்டைலை (சுவிங்கத்தை வில்லன் நெத்தியில் அடித்து சாப்பிடுவது, கண்ணாடியை சுழற்றுவது) போன்றவற்றை செய்கிறார்.  தமிழ்ல திக்கிதிக்கி பேசி கலகலப்பு உண்டு பண்ணூகிறார்.
தீபிகா  நடிப்பு எப்படி அண்ணே ?
தீபிகா பாக்க நல்லா இருக்குது. ஆனா குரல்லுதான் படு பயங்கரமாக இருக்கு. டப்பிங் வைச்சு இருக்கலாம்.
டைரக்‌ஷன் எப்படி அண்ணே ?
நம்ம ஆளுங்கதான் ஹாலிவுட் டிவிடியை பார்த்து படம் எடுக்கிறாங்கன்ன இவரு நம்ம பழைய படங்களின் டிவிடியை (கில்லி,அலெக்ஸ்பாண்டியன்,சந்திரமுகி) பார்த்து எடுத்து இருப்பாறு போல.அப்படியே காப்பி அடித்து இருக்கிறாரு. ஆனா காப்பி அடிச்சாலும் நல்லா விருவிருப்பா எடுத்து இருக்கிறாரு. நம்ம சிங்கம் ஹரி தம்பி படம் மாதிரி இருக்கு.(டாசுமோ பறக்குது, அரிவாளோட அலையறங்க).
ஒளிப்பதிவு, இசை, செட்டிங் எல்லாம் எப்படி இருக்கு அண்ணே ?
ஒளிப்பதிவு நன்றாக இருக்கு. இசையும் பரவாயில்லை. கிராமத்து செட்டிங்கும் நல்லா இருக்கு.
அப்ப முடிவா என்ன சொல்றிங்க அண்ணே குடும்பத்தோடு போய்ப்பார்க்லாம்ன்னு சொல்றிங்களா ?
போய் குடும்பத்தோடு போய் பாரு. படம் கலகலப்பாக, காமெடியாக இருக்கு.

புதுகை ரவிNo comments:

Post a Comment