Sunday, 18 August 2013

தெரு நாயுடன் ஒரு பேட்டி – புரிந்தும் புரியாமலும் கிடைத்த தகவல்கள்


 
எங்கள் வீட்டு  அருகில் தெரு நாய் ஒன்று சுருண்டு படுத்து கொண்டு இருந்தது. அதன் அருகில் சென்றேன். என்னைப்பார்த்ததும் முறைத்தவாறு எழுந்து உட்கார்ந்தது.

நீங்க எத்தனை வருஷமாக இருக்கிங்க இந்த தெருவில? உங்களைப்பற்றியும் உங்கள் குடும்பத்தைப்பற்றியும் சொல்லுங்களேன் ?

நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் இந்த தெருவிலதான். எட்டு வருஷமாக இந்த தெருவில இருக்கேன். எங்க கணவரையும் முதன் முதலாக இந்த தெருவிலதான் நான் சந்திச்சேன். எங்களுக்கு நான்கு பிள்ளைக் குட்டிங்க. நாலும் பக்கத்து தெருவிலதான் சுத்திட்டு இருக்கு.

நீங்க என்ன சாப்பிடுவிங்க நாள் முழுவதும் ?

கோபத்தோடு காலைல எழுந்ததும் பில்டர் காபி குடிப்பேன், காலை டிபன் இட்லி பொங்கல் வடைய சாப்பிட்டு மதியம் புல் மீல்ஸ் சாப்பிட்டு இராத்திரி சப்பாத்தி குருமாவோட சாப்பாட்டை முடிச்சுக்குவேன்னு உங்களை மாதிரி சொல்லுவேன் நினைச்சியா, மீதி போன சோறு, குழம்புதான் இந்த தெருவில எனக்கு கொடுப்பாங்கன்னு உனக்கு தெரியாதா?

சரி கோபப்படாதிங்க, ரொம்ப நாளா ஒரு கேள்வி உங்ககிட்டேகேட்கனுன்னு நினைச்சேன். உங்க ஏரியாவிற்கு வேறு எந்த நாய் வந்தாலும் கும்பலாக அதை துரத்திவிட்டுதான் மறு வேலை பார்க்கிறீங்க ஏன்

பின்ன எங்களுக்கே ஒரு வேளை சாப்பாடு கூட கிடைக்கமாட்டுங்குது ? இதில மத்த ஏரியா நாய்களும் எங்க சாப்பாட்டுற்கு போட்டியா வந்துடுது. எங்களுக்கு எதுவுமே கிடைக்கமாட்டுங்குது அதனாலாதான் அதை துரத்திட்டு மறு வேலை பார்க்கிறோம். இரண்டாவதாக நாங்க கஷ்டப்பட்டு வளர்த்த எங்க பிள்ளைக் குட்டிகளை  கூட்டிட்டு போயிடுதுங்க.

மனுஷங்களோட பிடிக்காத விஷயம் என்ன ?

நன்றின்னா எங்களைத்தான் சொல்லுவாங்க ? நீங்க என்னடான்னா நன்றி கெட்ட நாயேன்னு திட்டுறீங்க.   இது எங்களுக்கு மிகவும் பிடிக்காத விஷயம்

எனக்கு வேறு எதாவது சொல்ல விரும்புகிறீர்களா?

ஆமாம். ஊர்ல எவ்வளவு பிரச்சனை இருக்கு, விலைவாசி உயர்வு, வேலை கிடைக்கலென்னு பிரச்சனை, கூடங்குளம் பிரச்சனை, கரெண்ட் இல்லைன்னு எவ்வளவு பிரச்சனை இருக்கு அதைவிட்டுவிட்டு நீ வெட்டியா என்னை பேட்டி எடுக்கிற. உன்னை என்ன பன்றது. இவ்வளவு நேரம் பேட்டி எடுத்தியே ஒரு பிஸ்கட் போடனும்  தோன்றிச்சா உனக்கு. உன் உடம்பில கொஞ்சம் சதையை பிச்சு எடுத்தா என்ன  என்று என்மீது வெறியோட பாய

ஐயோ ! என்று அலறி படுக்கையை விட்டு எழுந்தேன். பார்த்தால் எல்லாம் கனவு. வேறு ஒன்றும் இல்லை நண்பர்களே ? இரவில் தமிழில் டப்பிங் செய்யப்பட்ட ஹாலிவுட் படங்களை பார்த்தேன். அதில் நாய், எலி, பூனை எல்லாம் தமிழில் பேசியது. உண்மையில் எல்லா மிருகங்களும் பேசினால் என்ன நடக்கும் என்று நினைத்தவாறு படுத்தேன். அதனால்தான் ந்த கனவு. நிஜமாக எல்லா மிருகங்களும் பேசினால் நம்ம நிலைமை என்ன ஆகும் ?


புதுகை ரவி.


குறிப்பு : தெரு நாயை நேரடியாக புகைப்படம் எடுக்க எத்தனையோ முயற்சி செய்தேன். முடியவில்லை.  நாயை பின்புறமாகத்தான் எடுக்க முடிந்தது (மனசாட்சி : நேரடியாக உனக்கு படம் எடுக்க பயம் உனக்கு தைரியம் இல்லை. அதுதான் பின்புறமாக எடுத்திருக்கேன்)

10 comments:

 1. பேட்டி மனம் கவர்ந்தது
  ரசித்துப்படித்தேன்
  நாயிடம் இருந்து நன்றியைப் பிரித்தால்
  அது செல்லாக் காசு
  அதனால்தான் நன்றி கெட்ட நாயே என
  மனிதர்களை கோபத்தில் மிகச் சரியாகத்
  திட்டுகிறோம் என நினைக்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஸார்.

   Delete
 2. Replies
  1. தமிழ் மணம் முதல் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி ஸார்

   Delete
 3. அருமையான கற்பனையான பதிவு நன்று

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன் ஸார்

   Delete
 4. Replies
  1. என்ன பண்றது தனபாலன் ஸார் ! என் கனவில நயந்தாரவும், ஹன்சிகாவும் வரமாட்டேங்கராங்க. நாய்தான் கனவில வருது சிம்பு கனவிலும், ஆர்யா கனவிலும்தான் அவங்க வருவாங்க போல இருக்கு. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்

   Delete
 5. மிகவும் ரசித்துப்படித்தேன்.

  ReplyDelete
 6. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி Gentleman.

  ReplyDelete