Friday 15 November 2013

க்ரிஷ் 3 திரை விமர்சனம்





கோய் மில் கயா, க்ரிஷ் படத்தின் தொடர்ச்சி க்ரிஷ் 3.

முதல் பாகமான கோய் மில் கயாவில் ஹிருத்திக் ரோஷன் முளை வளர்ச்சி இல்லாத இளைஞனாக  நடித்து இருப்பார். விண்வெளியில் இருந்து பூமிக்கு வரும் வேற்றுக்கிரகவாசி மூலம் அவருக்கு புதிய சக்தியை கிடைத்து மிகுந்த றிவு ள்ளவராக மாறிவிடுவார்.  


இரண்டாம் பாகத்தில் க்ரிஷில் ஹிருத்திக் ரோஷன் மகன் தந்தை இரட்டை வேடத்தில் நடித்து இருப்பார். மகனுக்கும் விசேஷ சக்தி கிடைக்கிறது. தந்தை சிங்கப்பூரில் ஒரு விபத்தில் இறந்துவிட்டாதக நினைத்து கொண்டு இருப்பார். ஆனால் தந்தை நஸ்ருதீன் ஷாவின் பிடியில் உயிரோடு இருப்பார். அவரை மகன் காப்பாற்றி கொண்டு வருவார்.

மூன்றாம் பாகமன க்ரிஷ் 3 ல் தந்தை ஹிருத்திக் ரோஷன் சூரிய ஒளியை பயன்படுத்தி அதன் மூலம் இறந்துவிட்ட உயிரினங்களை உயிர்த்தெழச் செய்யும் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறார். தந்தை ஹிருத்திக் ரோஷன் DNA மூலம் உருவான  வில்லன் விவேக் ஓபராய் மும்பையில் விஷக்கிருமியை பரப்புகிறார்.  தந்தையும் மகனும் மும்பை நகரைக் காப்பாற்றுகிறார்கள். இதனால் விவேக் ஒபராய், கோபம் கொண்டு மருமகளான பிரியங்கா சோப்ராவை கடத்தி வைத்துக்கொண்டு தான் உருவாக்கிய மனிதன் பாதி மிருகம் பாதியான தன்னுடய மனிதர்களை ஹிருத்திக் ரோஷனை கொல்ல அனுப்புகிறார்.  தந்தை ஹிருத்திக் ரோஷன் தன் உயிரை கொடுத்து தன் மகனை காப்பாற்றுகிறார். மகன் மனைவியை மீட்டு  விவேக் ஓபராயை கொன்று மனைவியை மீட்கிறார். இதுதான் கதை. 

ஹிருத்திக் ரோஷன் மகன் தந்தை என இரட்டை வேடத்தில் நன்கு வித்தியாசம் காட்டி நடித்து இருக்கிறார். பிரியங்கா சோப்ராவும் அழகாக வந்து போகிறார். வில்லி வேடத்தில்  நடித்து இருக்கும் கங்கனா ரணவத்தும் நன்றாக நடித்து இருக்கிறார். விவேக் ஒபாரயும் தன் வில்லன் வேடத்தை நன்றாக சிறப்பாக செய்து இருக்கிறார்.

இசையும் நன்கு கேட்கும்படி உள்ளது. திருவின் ஒளிப்பதிவும் நன்றாக உள்ளது.

ராகேஷ் ரோஷன் ஹாலிவுட் படம் மாதிரி எடுத்து இருக்கிறார்.

நான் ரசித்த சில காட்சிகள்

ஹிருத்திக் ரோஷன் ஆகாயத்தில் விமானத்தின் கோளாறுகளை சரி செய்து விமானத்தை தரையில் இறக்கும் காட்சி,

மனிதன் பாதி மிருகம் பாதியான வில்லனின் நாக்கு 30 அடி வரை நீளும். அவனின் நாக்கை கொண்டே அவனை தும்சம் செய்யும் காட்சி,  

ஆக மொத்த்தில் குடும்பத்துடன் பார்க்க ஏற்ற படம். குழந்தைகள் மிகவும் ரசிப்பார்கள்.

No comments:

Post a Comment