Sunday, 2 February 2014

அந்த காலத்தில நாங்க – ஒரு தந்தையின் புலம்பல்

அந்த காலத்தில நாங்க என்று அம்மா, அப்பா சொல்லும் பொழுது எரிச்சலாக இருக்கும். அவர்கள் சொல்லுவதை காது கொடுத்து கேட்க மாட்டோம். ஆனால் பழைய நினைவுகளை இன்னோருவரிடம் பகிர்ந்து கொள்வதில் மனதிற்கு மிகவும் ஆனந்தம் கிடைக்கிறது என்று இப்பொழுதுதான் புரிகிறதுநான் என் மகனிடம் என்ன புலம்பினேன் என்று நீங்களும் கேளுங்கள். உங்களுக்கும்  இந்த அனுபவம் இருக்கும் என்று நினைக்கிறேன்.ந்த காலத்தில நாங்க கிட்டிப்புல்லு, கோலிக்குண்டு, பம்பரம், கண்ணாமூச்சி, கிரிக்கெட் போன்ற பல வகையான விளையாட்டுக்களை விளையாடி இருக்கோம்


ஆனா இப்ப நீங்க என்னடான்னா  எப்ப பார்த்தாலும் கம்ப்யூட்டர் முன்னாடி உட்காந்து கொண்டு கம்ப்யூட்டர் கேம்ஸ் மட்டும் ஆடிக்கிட்டு  இருக்கிங்க.ந்த காலத்தில நாங்க சினிமா தியேட்டருக்கு போனா டிக்கெட், தீனி, சைக்கிள் டோக்கன் எல்லாவிற்கும் சேர்த்து அஞ்சு ரூபாய்க்கு மேல ஆகாது. பொங்கல், தீபாவளின்னு எல்லா பண்டிகளிலும் ரிலிசான அன்றைக்கே பார்த்து விடுவோம்தீபாவளி அன்று மேட்னி ஷோ மதியம் இரண்டு மணிக்கு ஆரம்பிக்கும். நாங்க பனிரெண்டுக்கே போய் தியேட்டர் வாசலில் நிற்க ஆரம்பித்து அடித்து பிடித்து கூட்டத்தில் நசுங்கி வியர்வை வழிய தியேட்டருக்குள் உள்ளே நுழைவோம்.

ஆனா இப்ப நீங்க என்னடான்னா  ஆன்லைனிலே டிக்கெட்டை ரூபாய்  நூற்று ஐம்பதிற்கு புக் பண்ணி சட்டை அழுக்கு படாம சினிமா ஆரம்பிப்பதற்கு  ஐந்து நிமிடம் முன்னர்  போகிறீர்கள். பாப்கார்ன், ஐஸ்கீரீம் என்று இன்னும் இருநூறு ரூபாய் செலவு செய்கிறீர்கள்.


ந்த காலத்தில நாங்க பொங்கல்ல பானையில பொங்க வைச்சு நாங்க கரும்பு கட்டு கட்டாக சுவைத்து இருக்கோம். வெய்யில் காலத்திலே நுங்கு, சேமியா ஐஸ், சாப்பிட்டு இருக்கோம். கல் கோனா, கமர்கட்டு, மிக்ஸர், மணப்பாறை முறுக்கு எனபல திண்பண்டங்களை சாப்பிட்டு இருக்கோம்ஆனா இப்ப நீங்க என்னடான்னா பொங்கல்ல கரும்பை சாப்பிட்டதே கிடையாது. குக்கர்ல வைக்கிற பொங்கலைதான் சாப்பிட்டு இருக்கிங்க. தினமும் ஜங்க் புட், சிப்ஸ், மாகி, நூடில்ஸ், பர்க்கர், சாப்பிடுறீங்க.

ந்த காலத்தில எங்க அப்பா தீபாவளி பண்டிகையிலே பேண்ட், சட்டைத்துணி ஒரே கலரிலே இரண்டு மீட்டர் வாங்கி வருவார். அதிலதான் நாங்க பேண்ட், சட்டை தைத்துக்கொள்வோம். காலேஜ் வரை நாங்கள் செருப்பு அணிந்துதான் சென்று இருக்கிறோம். ஷு அணிந்ததே இல்லை.


ஆனா இப்ப நீங்க என்னடான்னா எல்.கே.ஜீலே ஜீன்ஸ், டீ ஷ்ர்ட், காலில் லிபர்டி ஷு போட்டுட்டுகிட்டுப் போறிங்கந்த காலத்தில நாங்க படிக்கும்பொழுது பிரஷர் அதிகம் இல்லை. காலேஜ் வரை அதிக சுமையில்லை. படிப்பு எளிதாக இருந்தது.


ஆனா இப்ப நீங்க நாங்க காலேஜ்ஜில படிச்சதை நீங்க எட்டாம் வகுப்பிலே படிச்சிடுறீங்க. அதிக பிரஷர். படிப்பு கடினமாக இருக்கிறது.நீங்கள்  பலவற்றை இழந்து இருக்கிறீகள். நிறைய கிடைத்தும் இருக்கிறது. உங்களை பார்த்து பரிதாப்படுவதா, அல்லது சந்தோப்படுவதா. என்று தெரியவில்லை..

  

9 comments:

 1. வணக்கம்

  அன்றும் இன்றும் தந்தையின் புலம்பல் பற்றி நல்ல உரையாடல் மூலம் அற்புதமாக சொல்லியுள்ளிர்கள் வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்

   Delete
 2. காலங்கள் மாறும்...
  காலங்கள் மாறும் கோலங்கள் மாறும்...
  வாலிபம் என்பது பொய் வேஷம்...
  தூக்கத்தில் பாதி...
  தூக்கத்தில் பாதி ஏக்கத்தில் பாதி...
  போனது போக எது மீதம்...?
  பேதை மனிதனே...!
  பேதை மனிதனே கடமையை இன்றே...
  செய்வதில் தானே ஆனந்தம்...!

  கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் கோலங்கள்...
  துடுப்பு கூட பாரம் என்று கரையைத் தேடும் ஓடங்கள்...
  கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் கோலங்கள்...

  நீங்கள் கேட்டவை - இது படத்தின் பெயர்...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன் சார்

   Delete
 3. காலம் மாறுது ,நாமும் மாறவேண்டியிருக்கே ரவி ..அசத்தல் பதிவுகளை தொடருங்கள் ..தொடர்கிறேன் !நீங்கள் கோன் ஐஸ் ,பாப் கார்ன்எழுதி இருப்பதைப் பார்த்ததும் நேற்று நான் எழுதிய நினைவுக்கு வந்தது ...அது>>> http://jokkaali.blogspot.com/2014/02/blog-post_9270.html
  ''இடைவேளை நேரத்தில் கோன் ஐஸ் ,பாப் கார்ன் விற்க மாட்டேங்குது
  த ம 1

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும், ஓட்டிற்கும் மிக்க நன்றி பகவான்ஜி சார்

   Delete
 4. நீங்கள் பலவற்றை இழந்து இருக்கிறீகள். நிறைய கிடைத்து
  >>
  தவறு நம்மிடம் இருக்குங்க சகோ! பள்ளிக்கு ஷூ போட்டு அனுப்பத்தான் வேணும். நாலு பிள்ளைகளோடு போய் பிசா, பர்கர்ன்னு சாப்பிடதான் வேணும்,

  ஆனா, வீட்டுல கமர்கட், கல்கோனா மிட்டாய் வாங்கித்தரலாமே!

  நீங்க ஏன் குக்கர்ல பொங்கல் வைக்குறீங்க!? குழந்தைகளுக்கு மேகி, பர்கர், பிசான்னு யார் பழக்கப்படுத்தியது !? என் பசபசங்களுக்கு நான் மேகி, பாஸ்தான்னும் சமைச்சுத் தருவேன். அதே நேரம் கேப்பைக் களி, கேப்பைக்க்கூழ், பாவாடை தாவணி, சொப்பு விளையாட்டு, தும்பி பிடிக்குறதுன்னும் சொல்லித் தந்திருக்கேன். கிணத்துல தண்ணி இறைக்கவும் என் பசங்களுக்கு தெரியும், ஆட்டுக்கல்லில் மாவரைக்கவும் சொல்லிக் கொடுத்திருக்கேன்.

  ReplyDelete
 5. பழசு எப்படி மறக்கக் கூடாதோ! அப்படித்தான் புதுசையும் ஏத்துக்கனும்

  ReplyDelete
  Replies
  1. தாங்கள் சொல்லுவது முற்றிலும் சரி ராஜி மேடம். தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி

   Delete