Monday 17 March 2014

தமிழ் சினிமாவில் சண்டைக்காட்சிகளில் உயிர் இல்லாத ஜீவன்கள் படும்பாடு - ஒரு கற்பனை உரையாடல்




பழைய படம் எல்லாம் பார்த்து இருப்பிங்க. எம்.ஜி.ஆர், ரஞ்சன், ஆனந்தன் இவங்க படத்தில சண்டைக்காட்சிகளில் எல்லாம் வாள் சண்டைதான் முக்கியமாக இருந்தது. பால்கனில போய் சண்டை ஹீரோவும் வில்லனும்  வாள் சண்டை போடுவாங்க பிறகு கொஞ்சம் கொஞ்சமாக இறங்கி மாடிப்படிக்கெட்டுல சண்டைப்போட்டுக்கிட்டு வருவாங்க.

அப்புறம் எம்.ஜி.ஆர். சிவாஜி, ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் இவங்க வந்தப்புறம் சண்டைக்காட்சிகளில் ஒரு சின்ன மாற்றம். ஒட்டலில் ஒரு அண்டர் கிரவுண்ட் ஒன்று இருட்டாக இருக்கும். அங்கு அரிசி மூட்டைகள், டின்னுகள் இருக்கும். அது மேல போய் விழுந்து சண்டை போடுவாங்க.  இல்லைன்னா பாடைழஞ்ச ஒரு பழைய பங்களா ஒன்று இருக்கும். அங்க போய் சண்டை போடுவாங்க.

அப்புறம் கமல் ரஜினி படத்தில காரில துரத்தி துரத்தி சண்டை, ரயிலில் சண்டை, ஹெலிகாப்டரில் சண்டை, ரேக்ளா சண்டை, வில்லனின் படகை ஹீரோ துரத்தி துரத்தி சண்டை, கண்ணாடியை உடைச்சுக்கிட்டு சண்டை என்று பல வகை சண்டை போடுவார்கள். அங்க அங்க பாம் வெடிக்கும்.

இப்ப விஜய், அஜித், சூர்யா, விக்ரம் படத்தில ஊர்விட்டு, நாடு விட்டு சண்டை, டாட்டோ சுமாவில துரத்தி துரத்தி சண்டை, பறந்து பறந்து சண்டை, வில்லனின் வாயிற்குள் கையைவிட்டு,  நாக்கை இழுத்தவாறு சண்டை, அரிவாள் சண்டைன்னு பல வகை சண்டைகள் இருக்கிறது..

அதில பாதிக்கப்பட்ட சில உயிர் இல்லாத ஜீவன்கள் பேசறத கேட்போம் வாங்க.


போலீஸ் ஸ்டேஷன் நாற்காலி : ஹீரோவுக்கு கோபம் வந்தாலும் சரி, வில்லனுக்கு கோபம் வந்தாலும் சரி என்னைதான் முதல்ல உதைக்கிறாங்க.  இத கேள்வி கேட்க யாரும் இல்லையா?

டாடாசுமோ :  நான் என்ன பாவம் செய்தேன் தெரியல்ல. ஹீரோ ஒரு அடிஅடிச்சா வில்லனின் அடியாட்கள் உடனே என் கண்ணாடி மேலதான் விழுறாங்க. ஹீரோ ஒரு தடவை கூட என் மேல விழுந்தது இல்லை. அப்ப அப்ப என் வண்டில பாம் வைச்சு 50 அடி தூரம் பறக்க வைக்கிறாங்க. வில்லனின் அடியாட்கள் என் வண்டில மட்டும்தான் வருவாங்களா சொல்லுங்க மக்களே.

தந்திகம்பம், டிரான்ஸ்பார்மர் :  உங்களுக்கு மட்டும் இல்ல எனக்கும் இதே கதிதான். ஹீரோ ஒரு அடிஅடிச்சா வில்லனின் அடியாட்கள்  நேராக என் மேலதான் விழுறாங்க. உடனே வெடிச்சு வில்லனின் அடியாட்களை கொல்லனுமாம்

பூட்டு சங்கிலி : ஹீரோவுக்கு வில்லனை அடிக்க எதுவும் கிடைக்காட்டி என்னைதான் எடுத்துக்கிட்டு அடிக்கிறாங்க.

கை பம்பு : எனக்கும் இதே கதிதான் ஹீரோவுக்கு கோபம்  வந்தா  பக்கத்தில நான் இருந்தா போதும் உடனே என்னை பிடுங்கி வில்லனை அடிக்கிறாறு.

காய்கறி வண்டி. : ஹீரோவில்லன் சண்டைல நானும் அதிகம் பாதிக்கப்படுகிறேன். என் மேல விழுந்து நாஸ்தி பண்ணிடாராங்க
 
சாக்கடை மூடி :  நான் மக்கள் யாரும் சாக்கடைல விழுந்திடக்கூடாதென்னு மூடிகிட்டு சும்மா உட்காந்தா என்னை போய் வில்லன்  ஹீரோ முகத்தில் தூக்கி எறிகிறாறு அவரு அதை கரெக்டா பிடிச்சுடு வில்லன் மேல திருப்பி தூக்கி ஏறிகிறாறு. வில்லன் விழுந்து செத்துடுறான். எனக்கு ஓன்று புரியல்லை ஹீரோ மட்டும்தான் கரெக்டா பிடிப்பரா என்ன ?

பிச்சைக்காரர்களின் தட்டில் இருக்கும் சில்லறைகள்.  ஹீரோ சண்டை போடுவதற்கு என்னையும் ஒரு ஆயுதமாக பயன்படுத்தராறு. ஒரு துண்டுல்ல என்னைச்சேர்த்து வில்லனின் அடியாட்களை அடித்து துரத்தராறு.

ஆக மொத்தம் சண்டைக்காட்சிகளில் ஹீரோக்களிடமும் வில்லன்களிடமும், அடியாட்களிடமும் இந்த உயிர் இல்லாத ஜீவன்கள் சிக்கி சின்னாபின்னமாகிறது உண்மைதான்.


6 comments:

  1. நல்லாவே சிந்திச்சிருக்கீங்க!

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி மேடம்

      Delete
  2. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் "அன்பே வா" படத்தில் சொன்னது தான் ஞாபகம் வரும்...

    "எதையும் அழிக்காதீங்க... ஆக்கப் பாருங்க..."

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன் சார்

      Delete
  3. தம்பி ஜெயசீலன் தளம் வழியாக உங்கள் தளத்திற்கு வந்தேன். வித்தியாசமான சிந்தனைகள்! தொடருங்கள், தொடர்கிறேன்.

    ReplyDelete
  4. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete