Thursday 1 May 2014

காதில் இயர் போன் எதிரில் எமன்


இன்றைய காலகட்டத்தில் வேலைக்குப்போகும் ஆண்களும் சரி வேலைக்குப்போகும் பெண்களும் சரி செல்போனுக்கு முழுவதும் அடிமையாகி விட்டார்கள். தூங்கும் நேரம் தவிர்த்து கையில் செல்போனுடனே இருக்கிறார்கள். குறைந்தது பத்து மணி நேரம் காதில் இயர் போனை அணிந்து கொண்டு இருக்கிறார்கள். சிலர் ஆபத்தை தானாகவே தேடிக் கொள்கிறார்கள் எப்படி என்றால் காதில் இயர் போனை அணிந்துகொண்டு சாலைகளையும், ரயில் தண்டவாளத்தையும் கடக்கிறார்கள். எதிரில் பஸ்ஸும், ரயிலும் வருவது அவர்களுக்கு தெரிவது இல்லை, காதில் இயர் போனை அணிந்துகொண்டு எமனுக்கு அழைப்பு விடுகிறார்கள். சாலை விதிகளை மறந்து விடுகிறார்கள்.

முன்பு எல்லாம் சாலையில் தானாகவே யாராவது சிரித்து கொண்டே சென்றால் அவர்களை பைத்தியம் போல் இருக்கிறது, புத்திபேதலித்துவிட்டது போல் இருக்கிறது என்றுதான் சொல்லி கொள்வார்கள். ஆனால் இப்பொழுது எல்லாம் சாலையில் தானாகவே யாராவது சிரித்து கொண்டே சென்றால் அவர்கள் காதில் காதில் இயர் போன் இருக்கிறது என்றுதான் அர்த்தம். ஆண்கள் சாலையில் சத்தம் போட்டுக்கொண்டு பேசிக்கொண்டு நடக்கிறார்கள். பெண்கள் சத்தமே போடாமல் இயர் போன் ஒயரை வாயில் வைத்து கடித்துக்கொண்டு பேசிக்கோண்டே நடக்கிறார்கள். அவர்களைச்சுற்றி என்ன நடந்தாலும் அவர்களுக்கு தெரிவது இல்லை.






அவர்கள் வீட்டில் காதில் இயர் போனை அணிந்துகொண்டு பாட்டுக்கேட்டால் அவர்களுக்கு ஆபத்தில்லை. ஆனால் சாலையில் செல்லும்பொழுதுதான் ஆபத்து காத்து இருக்கிறது. இதற்கு ஒரு உதாரணம்.

கடந்த பிப்ரவரி மாதத்தில் உமா மகேஸ்வரி என்கின்ற பெண் சாப்ட்வேர் என்ஜினியரை  நான்கு கயவர்கள் பலாத்காரம் செய்து கொன்றது எல்லோருக்கும் தெரியும். அவர் அந்த இருட்டில் காதில் இயர் போனை அணிந்துகொண்டு சென்று இருக்கிறார். கயவர்கள் பின் தொடர்வது அவருக்கு தெரியவில்லை. அவர் அன்று மட்டும் இயர் போனை அணியாமல் இருந்தால் தப்பித்து ஒடி இருக்கலாம். ஆகவே பெண்கள் ஆள்  நடமாட்டம் இல்லாத இடத்தில் இயர் போனை உபயோகப் படுத்தாமல் இருப்பது அவர்களுக்கு நல்லது.

இப்படியே நிலைமை நீடித்தால் நாளை சாலைப்பாதுகாப்பு சங்கம் சாலையை கடக்கும்பொழுது இயர்போனை உபோயகப்படுத்தக்கூடாது என்கின்ற அறிவிப்பு வந்தாலும் வரலாம்.


ஆகவே வேலைக்கு போகும் இளைஞர்களே, பெண்களே சாலையில் இயர்போனை காதில் அணிந்து கொண்டு சாலையை கடந்து செல்லாதீர்கள்.  வீட்டில் மட்டும் இயர்போனை உபோயகப்படுத்துங்கள். சற்றே சிந்திப்பீர்.


புதுகைரவி



4 comments:

  1. ரவி,
    என்ன சொன்னீங்க? காதுல சரியா விழலியே?

    ReplyDelete
    Replies
    1. நான் பார்த்த அந்த நபர் நீங்கள்தானா ? இயர் போனை மாட்டிக்கிட்டு சாலையை கடந்தது ? தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி காரிகன்

      Delete
  2. இருங்க! இயர்ஃபோனை கழட்டிட்டு வந்து படிக்குறேன்.

    ReplyDelete
  3. நீங்களுமா ? நம்ப முடியவில்லை. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி மேடம்

    ReplyDelete