Thursday, 7 March 2013

இப்படியும் சில விசித்திர மனிதர்கள்


நான் தினமும் எத்தனையோ மனிதர்களை சந்திக்கிறேன் பழகுகிறேன்          பேசுகிறேன். சில மனிதர்களை பார்க்கும் பொழுது அவர்களுடய நடவடிக்கைகள் மிகவும் விசித்திரமாக இருக்கும். பார்ப்பதற்கு நன்றாக இருப்பார்கள். நன்றாக பேசுவார்கள். ஆனால் அவர்களுடய அன்றாட நடவடிக்கைகள் ஒரு தினுசாக ஒரு மாதிரியாக இருக்கும். எத்தனையோ நபர்கள் அவர்களுக்கு ஆலோசனை கூறி விட்டார்கள்., அவர்கள் திருத்தி கொள்ளவில்லை. அவர்களுக்கு மனநோயா அல்லது குணமே அப்படித்தானா என்று குழம்பி இருக்கிறேன். அவர்களைப்பற்றி ங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.


முதல் நபர்

முப்பது வயது இளைஞன். வேலை எதுவும் இல்லை. காலை 4 மணிக்கு எழுந்து தன் வீட்டை கூட்ட ஆரம்பிப்பார். ஒரு ஈரத்துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு வீட்டை துடைக்க ஆரம்பிப்பார். வீட்டுகதவு, ஜன்னல், வீட்டு வாசல், தரை என்று வீடுமுழுவதும் 11 மணிவரைக்கும் இதே வேலையைதான் செய்து கொண்டு இருப்பார். வீட்டில் கட்டில், பீரோ, டிவி, எதுவும் இருக்காது. வீடு காலியாக இருக்கும். குளிர்காலத்திலும் 4 மணிக்கு எழுந்து இந்த வேலையை செய்வதுதான் ஆச்சரியம். வேறு எந்த வேலைக்கும் முயற்சி செய்வதுமில்லை. நாள்முழுவதும் விட்டை துடைப்பதை தவிர இவர் எந்த வேலையும் செய்வதுமில்லை. இத்தனைக்கும் வீட்டு வேலை செய்வதற்கு ஒரு வேலைக்காரியும் வைத்து உள்ளார்.

இரண்டாவது நபர்

நாற்பது வயது குடும்பப் பெண்மணி இவர். வாரத்தில் ஒரு நாள் மட்டும்தான் விதவிதமாக சமையல் செய்வார். அதை ப்ரிட்ஜ்க்குள் வைத்து தினமும் சூடு செய்து ஓரு வார முழுவதும் தன் குடும்ப உறுப்பினர்களுக்கு பரிமாறுவார். வாரத்தில் ஒரு நாள் மட்டும்தான் சமைப்பேன் என்று தனது கொள்கையில் உறுதியாக இருக்கிறார். குடும்ப உறுப்பினர்கள் வெறுத்துபோய் தினமும் ஒட்டலில் வரவழைத்து சாப்பிடுகிறார்கள். யாருடய ஆலோசனைகளையும் இவர் கேட்பதில்லை.

மூன்றாவது நபர்

அறுபது வயது முதியவர் இவர். முன்கோபக்காரர். இவர் காரை யாராவது இடித்தால் கோபம் பொத்துக் கொண்டு வரும் இவருக்கு. தினமும் இவர் வீட்டின் முன்பு சிறுவர்கள் விளையாடி கொண்டு இருப்பார்கள். தவறுதலாக அவர் காரின் மீது பந்து பட்டுவிடும். உடனே வீட்டிலுருந்து வேட்டை துப்பாக்கியை எடுத்துக்கொண்டு வந்து அவர்களைப்பார்த்து கத்த ஆரம்பித்துவிடுவார். அவர்கள் பரம்பரையையே கொன்றுவிடுவதாக மிரட்டுவார். சிறுவர்களை துரத்தி துரத்தி அடிப்பார். தினமும் இந்த நிகழ்ச்சி நடக்கும்.

மேலும் சில நபர்களை வரும் பதிவுகளில் சொல்லுகிறேன்.



புதுகை ரவி






No comments:

Post a Comment