Tuesday, 11 June 2013

ரஜினியின் ராணாவும் சோனி தொலைக்காட்சித் தொடர் மகாராணா பிரதாப்பும்


சோனி தொலைக்காட்சியில் இரவு 10 மணிக்கு மகா ராணா பிரதாப் என்ற வரலாற்றுத் தொடர் வருகிறது.
தொலைக்காட்சித்தொடர் மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. அதில் மகாராணா பிரதாப்பாக  நடிக்கும் சிறுவனின்  நடிப்பு வியக்க வைக்கிறது.


(மகாராணா பிரதாப் வட மேற்கு இந்தியாவில் அமைந்திருந்த மேவார் மாகாணத்தின் இந்து அரசராவார். அவர் ராஜபுத்திரர்களின் சூர்யவன்ஷி குலமரபில் சிசோதியா என்கின்ற பிரிவை சார்ந்தவர். ராஜபுத்திரர்கள் தொன்று தொட்டு போற்றிவரும் வீரம், நாட்டுப்பற்று மற்றும் சுய மரியாதை ஆகிய அருங்குணங்களுக்கு ஒரு மிகவும் சிறந்த எடுத்துக் காட்டாக மகாராணா பிரதாப் சிங் விளங்கினார்).  
சரி இப்போழுது விஷயத்திற்கு வருகிறேன். தற்பொழுது ரஜினி நடிக்க இருக்கும் ராணாவும் சோனி சீரியல் மகாராணா பிரதாப்பும் ஒரே கதையா?  ரஜினிக்கு மிகவும் பொறுத்தமானா கதை இது. வேடத்திற்கு கச்சிதமாக பொருந்துவார். வீரதீர சாகசங்கள் நிறைந்த கதை இது. அப்படி இருந்தால் கண்டிப்பாக ரஜினிக்கு வெற்றிப்படமாக அமையும்.   


படம் எப்பொழுது தொடங்கும் என்று ஆவலாக காத்து கொண்டு இருக்கிறேன். ஆல் தி பெஸ்ட் ரஜினி சார்.

புதுகை ரவி

 

No comments:

Post a Comment