Sunday 25 August 2013

சூடுபறக்கும் சுவையான தயிர்சாதம் செய்வது எப்படி ?




வணக்கம் நேயர்களே, இந்தவாரம் உங்களுக்கு சூடுபறக்கும் சுவையான தயிர்சாதம் செய்வது எப்படி என்று செய்து காண்பிக்க போகிறேன்.

இது வந்து மனைவியை மாமியார் வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டு சாப்பாட்டுக்கு கஷ்டப்படுகிற கணவன்மார்களுக்கும், பல ஓட்டல்களில் சாப்பிட்டு வயிற்று வலியால் தினமும் அவதிப்படுகிற சேல்ஸ் மேன்களுக்கும், ஏற்ற இரவு உணவு இது.


தயிர்சாதம்னால்லே ஜில்லுன்னு சாப்பிட்டாத்தான் நல்லா இருக்கும்ன்னு நீங்க விவாதம் செய்யலாம். நீங்க சொல்றது முற்றிலும் சரி. வெயில் காலத்தில் தயிர்சாதம் சாப்பிட்டா ஜில்லுன்னுதான குளிர்ச்சியாத்தான் இருக்கும்.


ஆனா நான் இப்ப செய்யபோற சமையல் அதாவது சூடுபறக்கும் சுவையான தயிர்சாதம் என்கின்ற இந்த உணவு மழைக்காலத்திற்கும், குளிர்காலத்திற்கும் ஏற்ற உணவு இது. (என்ன பண்றது ஜில்லுன்னு தயிர்சாதம்ன்னு ஏகப்பட்ட பதிவர்கள் எழுதிட்டாங்க. என் மூளைக்கு வேற எந்த ஐடியாவும் வரமாடேங்குது. ம் எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு.)  


வாங்க இப்ப சூடுபறக்கும் சுவையான தயிர்சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். இந்த தயிர்சாத்தை சாப்பிட்டு மதிப்பெண் போட திருவாளர் கிருஷ்ணகுமார் அதாவது நிலா டிவியின் நிறுவனர் அவர்களை அழைத்து இருக்கிறோம். வாருங்கள் கிருஷ்ணகுமார் அவர்களே.


சூடுபறக்கும் சுவையான தயிர்சாத்திற்கு வேண்டிய சாமான்கள்


·         நல்ல பச்சரிசி ஒரு கப்

·         பால் ஒரு கப்

·         தயிர் – 2கப்

·         நறுக்கிய அல்லது துருவிய இஞ்சி ஒரு டீஸ்பூன்

·         பச்சை மிளகாய்  ஒன்று, வரமிளகாய் ஒன்று

·         எண்ணெய் ஒரு டீஸ்பூன்

·         கடுகு அரை டீஸ்பூன்

·         உளுத்தம் பருப்பு – அரை ஸ்பூன்

·         கருவேப்பிலை கொஞ்சம்

·         உப்பு – தேவைக்கு ஏற்ப்


இப்ப எப்படி செய்யறதுன்னு உங்களுக்கு சொல்லித் தருகிறேன்.

சாதம்  எப்படி செய்யறதுன்னு உங்களுக்கு சொல்லித்தரவேண்டியதில்லை. சாத்தை முதலில வைங்க. சூடா சாதத்தை வடிச்சிட்டிங்களா. அது ஆறுவதற்கு முன்பு இப்ப  தயிரையும், கொஞ்சம் பாலையும் ஊற்றி நன்றாக கடையவும். பிறகு அதுகூட உப்பையும் சேர்த்து கலக்கவும். பிறகு இஞ்சியைச் சேர்க்கவும் அப்புறம் வாணலியில்  எண்ணையில் கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து, பச்சை மிளாகாய் வதக்கி, அதில் சேர்க்கவும்.  


கடைசியாக அது மேல கருவேப்பிலையை தூவவும். 


இப்பொழுது  சூடுபறக்கும் சுவையான தயிர்சாதம் தயிர் சாதம் ரெடி.


நடுவர் கிருஷ்ணகுமார் அவர்களே இப்ப டேஸ்ட் பார்த்து உங்கள் கருத்தை சொல்லுங்க. 

டிஷ் நல்லா இருக்கு. ஆனா சாதம் நல்லா இருக்கு. ஆனா இதில தயிரையே காணோமே.


மன்னிசுக்குங்க நடுவர்களே. பிளேட்டை மாற்றி கொடுத்துவிட்டேன். வெறும் சாத்தை உங்களிடம் கொடுத்துவிட்டேன்.  இந்தாங்க தயிர்சாதம் பிளேட்.  சாப்பிட்டு சொல்லுங்க.


நல்ல இருக்கு. எனக்கும் கண்டிப்பா உதவும். என் மனைவியும் அடிக்கடி ஊருக்கு போயிடுறாங்க.


நன்றி சார். என்ன நேயர்களே செய்துபார்த்திட்டு உங்கள் கருத்தை சொல்லுங்க.




புதுகை ரவி







 

4 comments:

  1. Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்

      Delete
  2. பார்க்கும்போதே நல்லாயிருக்கும்ன்னு தோணுது.

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி மேடம்.

      Delete