Sunday 9 February 2014

சுவையான தக்காளி மேகி மசாலா செய்வது எப்படி ?



மேகி மசாலா என்றாலே பசங்க மட்டுமில்ல இப்பொழுது பெரியவங்களும் சாப்பிட ஆரம்பிச்சிட்டாங்க. அதில தக்காளியை சேர்த்தா கூடுதல் சுவை கிடைக்கும். பசங்களுக்கும் பிடிக்கும்.   தினமும் இட்லி, தோசை சாப்பிட்டு போரடிச்சவங்களுக்கு  இதை செய்து கொடுக்கலாம்நேரமும் மிச்சமாகும். எப்படி செய்யறதுன்னு சொல்லித்தரேன்.

தக்காளி மேகி மசாலா செய்வதற்கு வேண்டிய சாமான்கள்

·    சிறிய தக்காளி –  ஒன்றை துண்டு துண்டாய்  நறுக்கி     வைத்துக்கொள்ளவும்
·    மேகி ஒன்றை உடைத்து வைத்துக்கொள்ளவும்.
·    மேகி மசாலா பாக்கெட்டை  உடைத்து வைத்துக்கொள்ளவும்
·     பச்சை மிளகாய் ஒன்று
·     எண்ணெய் ஒரு டீஸ்பூன்
·     கடுகு அரை டீஸ்பூன்
·     உப்பு தேவைக்கு ஏற்ப




இப்ப எப்படி செய்யறதுன்னு உங்களுக்கு சொல்லித் தருகிறேன்.
     
  வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணையை விட்டு கடுகை தாளித்து கொள்ளவும்நறுக்கிய தக்காளி, பச்சை  மிளகாயை எண்ணையில் வதக்கவும்     தேவைக்கு ஏற்ப உப்பை சேர்த்துக்கொள்ளவும்.  

பிறகு வாணலியில் இரண்டு கப் தண்ணீர் விட்டு, மாகி மசாலாவை கலந்து உடைத்த மாகியை அதில் போட்டு  நன்றாக கொதிக்கவிடவும்.


    பிறகு மூன்று நிமிடம் கழித்து சுவையான தக்காளி மேகி ரெடி

    அதை பசங்களுக்கு கொடுத்து நீங்களும் சாப்பிடவும்.

2 comments:

  1. குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் தான்... எப்போதாவது செய்வதுண்டு...

    செய்முறைக்கு நன்றி...

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன் ஸார்.

      Delete