என்னுடைய
முதல் பதிவில் தில்லி மெட்ரோ பயணத்தைப்பற்றி எழுதி இருந்தேன்.
நான்
சந்தித்த பார்த்த சில சுவாரசியமான காட்சிகளையும் கேட்ட செய்திகளையும் மீண்டும் உங்களுடன்
பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
மெட்ரோவில்
கூட்டம் எப்பொழுதும் அதிகமாகவே இருக்கும். பயண நேரம் குறைவதால் எல்லோரும் மெட்ரோவையே
விரும்புவார்கள். இதனால் மெட்ரோவில்
நெருக்கமாக ஒருவர் முகத்தை ஒருவர்
பார்த்தபடியேதான் பயணம் செய்ய வேண்டி இருக்கும். சில சமயம் எல்லோரும் அமைதியாக இருப்பார்கள்.
சில வாரங்களுக்கு முன்பு என் பக்கத்தில் இருந்தவர் செல்போனில் மனைவியுடன் தன் மனைவியுடன்
பேசிக்கொண்டு இருந்தார். சாதரணமாக பேசி கொண்டு இருந்தால் பரவாயில்லை. சத்தமாக இருபது
நிமிடம் பேசிக்கொண்டு இருந்தார். பக்கத்தில் இருந்தவர்களை அவர் கண்டு கொள்ளவில்லை.
அவர் அப்படி சத்தமாக பேசியது யாருக்கும் பிடிக்கவில்லை. அவரிடம் எப்படி சொல்லுவது
என்றும் தெரியவில்லை. இதைப்பார்த்து கொண்டு இருந்த ஒரு இளைஞன் அவர் அருகில் சென்று அவரை
விட கத்தி பேச ஆரம்பித்தான். உடனே அவர்
அதிர்ச்சி அடைந்து பேச்சை நிறுத்திவிட்டார். வீட்டில் இந்த மாதிரி ஆட்கள் எப்படி வேண்டுமானா லும்
பேசிக்கொள்ளட்டும். பொது இடத்தில் சத்தமாக பேசி மற்றவர்களுக்கு தொந்தரவு கொடுக்காமல் இருப்பதே நல்லது.
வயதானவர்ளுக்கு
என்றே நான்கு இருக்கைகள் மெட்ரோவில் ஒதுக்கப்பட்டிருக்கும். அதில் ஒரு இளைஞன் அந்த
இருக்கையில் அமர்ந்து கொண்டு இருந்தான். ஒரு வயதானவர் அவனிடம் சென்று அந்த இருக்கையை கேட்க
அந்த இளைஞன் இருக்கையை விட்டு எழ மனமில்லாமல் கண்களை மூடியாவாறு உட்கார்ந்து கொண்டு இருந்தான். அவரும் கேட்டு அலுத்துபோய் நகர்ந்து விட்டார். அதைப்பார்த்ததும் ஒரு செய்தி
ஞாபகத்திற்கு வந்தது. வட ஆஸ்திரேலியாவில் ஓருவர் கால்
மெட்ரோரயிலுக்கும் பிளாட்பாரதிற்கும் நடுவில் மாட்டிக்கொள்ள அங்கிருந்த அனைவரும்
சேர்ந்து ரயிலையே தூக்கி அவரை காப்பாற்றியதாக படித்தேன்.. (புகைப்படம் இத்துடன்
இணைதுள்ளேன். அவர்களுக்கு இருக்கும் இந்த மனித நேயம் ஏன் இங்கு இருப்பவர்களுக்கு இல்லை.
அப்புறம் நான்
படித்த செய்திகள்
தில்லி
மெட்ரோ ரயில்களில் பிடிபட்ட பிக்பாக்கெட் திருடர்களில் 94% பேர் பெண்கள். மெட்ரோ
ரயில்களில் பயணம் செய்யும் பொது மக்களிடம் பெண்கள் நைசாக பேசியும், இடித்தும்
பிக்பாக்கெட் அடிகிறார்களாம்.
தில்லி மெட்ரோ காதலர்களின் மீட்டிங்
பாயிண்ட்டாக மாறி வருகிறது. அதிக நேரம் மெட்ரோ
ஸ்டேஷனில் இருந்தால் மெட்ரோவினர் அபராதம் விதிக்கின்றனர். இதன் மூலம் போன வருடம் (2014) தில்லி மெட்ரோவிற்கு
அபராத பணம் அதிகம் கிடைத்துள்ளது என்று
படித்தேன். காதலர்களிடம் கேட்டால் ” வெளியில்
சுற்றினால் பெற்றோர், உறவினர் யாரவது பார்த்து விடுகின்றனர். இங்கு யாரும் வந்து
பார்ப்பதில்லை அபராத பணம் கட்டி விட்டு நாங்கள் நிம்மதியாக இருக்கின்றோம் என்று
பதில் சொல்லுகின்றனர்களாம்.
மீண்டும் சில
சுவராசியமான தகவல்களை அடுத்தமுறை சொல்லுகிறேன்.
நன்றி
புதுகை
ரவி
புகைப்படம்
நன்றி குகூள்
என்னது 94% பேர் பெண்களா....!!!!!
ReplyDeleteஆம் உண்மை தனபாலன் சார். ரயில்வே நிர்வாகம் பாதுகாப்பு குறித்து பயணிகளுக்காக நோட்டிஸ் ஒட்டியுள்ளது. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி
Delete