Wednesday 4 December 2013

சுவையான பஞ்சாபி கடி பக்கோடா





நம்ம ஊர் மோர்க்குழம்புதாங்க இதுநம்ம ஊர்ல  மோர்க்குழம்புல  வெள்ளை பூசனிக்காய சேர்ப்பாங்க.   வட இந்தியர்கள்  கடலை மாவில செஞ்ச பக்கோடாவை சேர்க்கிறாங்க.

நாம சாம்பார், ரசம் பொறியல், கூட்டுன்னு எப்படி தினமும் சாப்பிடுகிறோமோ அவங்க கடி சாவல், ராஜ்மா சாவல்ன்னு தினமும் சாப்பிடுறாங்கசுடசுட சாதம் கூட பஞ்சாபி கடி பக்கோடாவை சாப்பிட்டா மிகவும் நன்றாக இருக்கும். சீக்கிரமாக ஜீரணமும் ஆகும். உடம்புக்கு ரொம்ப நல்லது. வாங்க  இப்ப எப்படி செய்யறதுன்னு சொல்லித்ரேன்.

கடிக்கு வேண்டிய சாமான்கள்

·         புளிப்பு மோர் – 1 கப்
·         கடலை மாவு – ½  கப்
·         உப்புதேவைக்கு ஏற்ப

தாளிக்க வேண்டிய சாமான்கள்

·          ஜீரகம், வெந்தயம்  –  ஒரு டீஸ்பூன்
·         பச்சை மிளகாய்  –  நான்கு, வரமிளகாய்  நான்கு
·         பூண்டு, இஞ்சி - சிறிதளவு
·         எண்ணெய் ஒரு டீஸ்பூன்
·         கருவேப்பிலை - சிறிதளவு         

1.   கடலை மாவு, உப்புபொடியாக  நறுக்கிய வெங்காயம் இவற்றையெல்லாம் நன்றாக கலந்து சிறிய பக்கோடாவாக சூடான எண்ணெயில் பொரித்து தனியாக எடுத்து வைக்கவும்.


  
2. சூடான எண்ணெயில் ஜீரகம், வெந்தயம், பச்சை மிளகாய், வரமிளகாய், கருவேப்பிலை, பூண்டு இஞ்சி போட்டு வதக்கவும்.  

3.  ஒரு  கிண்ணத்தில் வரமிளகாய்த்தூள், மஞ்சத்தூள், பெருங்காயத்தூள், தனியாத்தூள் சிறிது கரம் மசாலாத்தூள் போட்டு சிறிது தண்ணீர் விட்டு கலக்கி தாளிப்பில் கொட்டவும்.

4.   மசாலா வெந்தவுடன் அதில் கடலை மாவு, உப்பு கரைத்த மோர் கரைசலை  ½ மணி நேரம் குறைந்த தீயில் கொதிக்க வைக்கவும்.




5.   பின் பொரித்த பக்கோடாக்களை கடியில் போட்டு 2 ஸ்பூன் நெய் விட்டு மூடி வைக்கவும்.


இப்பொழுது சூடான சுவையான பஞ்சாபி கடி பக்கோடா தயார். சாதத்தில் கலந்து சாப்பிடவும்.


5 comments:

  1. அருமையாக விளக்கியுள்ளீர்கள்
    பார்க்கவே பரவசப்படுத்துகிறது
    படங்களுடன் சொல்லிச் சென்ற விதம் அருமை
    செய்ய பார்க்க உத்தேசித்துள்ளோம்
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஸார்.

      Delete
  2. இது போல் செய்ததில்லை... செய்முறை விளக்கங்களுக்கு நன்றி...

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன் ஸார்.

      Delete
  3. தமிழ் மணம் முதல் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி ஸார்

    ReplyDelete